எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவிப்பு!

எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, அன்றையதினம் முற்பகல் 9.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் கடந்த 14ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட்ட ‘பொருளாதார நிலைமாற்றம்’ மற்றும் ‘பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்’ ஆகிய இரண்டு சட்டமூலங்களும் முதலாவது வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளன.
இதனையடுத்து முற்பகல் 9.45 முதல் பிற்பகல் 5.30 வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|