இராஜதந்திர பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இலங்கை!

Tuesday, June 27th, 2017

வெளிநாடுகளுடனான இராஜதந்திர பொறிமுறையில் வினைத்திறன் மிக்க மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு அம்சமாக வெளிநாடுகளிலுள்ள தூதரங்களில் பணியாற்றும் உயரதிகளுடன் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி முக்கிய கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இதற்கென தூதரக அதிகாரிகளுக்கு ஏற்கனவே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் வெளிநாடுகளில் செயற்பாடுகளில் இன்றி இயங்கிவரும் நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளில் காணப்படும் தூதரகங்களை அரசாங்கம் மூடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: