ஒரு வங்கி ஒரு கிராமம் செயற்திட்ட கிளிநொச்சியில் ஆரம்பம்!
Tuesday, January 19th, 2021
ஒரு வங்கி ஒரு கிராமம் எனும் தொனிப் பொருளிலான செயற்றிட்டத்தை கிளிநொச்சி திருவையாறு மேற்கு பொது மண்டபத்தில் அங்குராப்பணம் நிகழ்வு வடமாகாண ஆளுனர் பி.எம்.சாள்ஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அங்குராப்பணம் செய்துவைத்தார்.
ஒரு வங்கி ஒரு கிராமம் எனும் திட்டத்தை தேசிய சேமிப்பு வங்கி திருவையாறு மேற்கு கிராமத்தை பொறுப்பெடுத்து அக் கிராமத்துக்கான கிராமக்களுக்கு வாழ்வாதாரத்தி உயர்த்து வதட்க்காக காசோலைகளை ஆளுனர் பி.எம்.சாள்ஸ் அவர்களினால் வழங்கிவைக்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், தேசிய சேமிப்பு வங்கி அதிகாரிகள், பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதசந்திரன் விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர் அரசகேசரி மற்றும் கிராமக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குமேலும் நிவாரண உதவிகள். ரவி கருணாநாயக்கவிடம் நரேந்திரமோடிஉறுதி!
5 மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!
பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குற...
|
|
|


