எட்கா உடன்படிக்கை குறித்து இலங்கை இந்தியா இடையில் பேச்சுவார்த்தை!
Tuesday, July 5th, 2016
எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தித் தந்திரோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமைச்சர் சமரவிக்ரம, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை (எட்கா) தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதேவேளை, எட்கா உடன்படிக்கை கைச்சாத்திட்டால் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆதன வரி செலுத்தாமையால் அபிவிருத்திப் பணிகள் முடக்கம்!
ஏ9 வீதியில் வாகனங்களை நிறுத்துவதனை தடை - வடக்கு மாகாணசபை!
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்....
|
|
|


