காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.!

Thursday, November 10th, 2022

எகிப்திலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை காலை நாடு திரும்பியுள்ளார்.

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கோப் 27 மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அத்துடன் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஷ்டலினா ஜோர்ஜியேவாவை சந்தித்து இலங்கைக்கான கடனுதவி குறித்து கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை, மாலைத்தீவின் சபாநாயகர் நஷீட் இந்த நிகழ்வின் போது இலங்கையின் சார்பில் பங்கேற்றமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்கிறது அரசாங...
கச்சதீவு விவகாரம் - மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - இந்திய நீதிமன...
பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன - கல்வி அமைச்...