ஆதன வரி செலுத்தாமையால் அபிவிருத்திப் பணிகள் முடக்கம்!

Friday, July 7th, 2017

வலி தெற்கு பிரதேச சபையில் பொதுமக்கள் பலர் ஆதன வரி செலுத்தாமல் இருப்பதால் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாக பிரதேச சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சபையின் வருமானத்தில் ஆதன வரியே பங்கு வகிப்பதனால் பிரதேச மக்கள் வீதிப் புனரமைப்பு மற்றும் தெரு விளக்குப் பொருத்துதல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவற்றை நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகிறது. ஆதன வரியை அவர்கள் செலுத்தாமையினால் பல மில்லியன் ரூபா வருமானத்தை இழக்க வேண்டியுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2017 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றங்கள் வருமானத்தை ஈட்டி அவ் வருமானத்தின் மூலம் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே பொது மக்கள் இவ்வாண்டு சபைக்குச் சேர வேண்டிய தமது ஆதன வரிகளை செலுத்தி திட்டமிட்ட அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவும் இதனூடகப் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவும் ஒத்துழைப்பு வழங்குமாறு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: