இன்னும் 5 வருடங்களில் உள்ளூர் நாய் இனத்தை காணமுடியாது – எச்சரிக்கிறார் சுகாதார உதவிப் பணிப்பாளர்!

Wednesday, July 5th, 2017

உள்ளூர் வளர்ப்பு நாய்களை உரிய வகையில் பராமரிக்காதுவிடின் எதிர்வரும் 5 வருடங்களில் உள்ளூர் நாய்களின் இனமே இல்லாது போய்விடும் என யாழ் மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உதவிப் பணிப்பாளர் வச்சலா அமிர்தலிங்கம் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீர் வெறுப்பு நோயைக் கட்டுப்படத்துவதற்கு அரசு தற்போது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. நோய் வராமல் பாதுகாப்பதற்கான ஊசி போடுதல் தொடர்கிறது. சாலைகளில் அதிகளவான நாய்கள் அலைந்து திரிவதால் அது ஒருவரைக் கடிப்பதன் மூலம் நோய் பரவும். இதனால் நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு கருத்தடை மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுமாயின் இனத்தையே காண முடியாது.

வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசிகள் போடப்பட்டு வளர்க்கப்பட்டால் நோய் வராது. நாயின் இனமும் கருத்தடை செய்யப்படாமல் பாதுகாக்கப்படும். எல்லா மக்களாலும் அதிக விலை கொடுத்து உயர் சாதி நாய்களை வாங்க முடியாது. ஏராளமானோர் பாதுகாப்புக்கு உள்ளூர் நாய்களையே வளர்க்கின்றனர். எனினும் இந்த நாய்கள் வீதிகளில் அலைந்து திரிவதால் நீர் வெறுப்பு நோய் பரவுகின்றது ஆகவே இனம் பரம்பலைத் தடுக்க கருத்தடை செய்யப்படுகின்றது.

கருத்தடை செய்வதன் மூலமாக உள்ளூர் நாய் இனம் எதிர்காலத்தில் இல்லாமல் போகும். ஆகவே மக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சந்தி ஊசிகளைப் போட்டு உரிய வகையில் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்த விடயத்தில் இனிமேலாவது அக்கறை கொண்டு செயற்பட வேண்டும்.

வீசர்நாய்க்கடி இல்லாத பிரதேசமாகவும், விசர்நோய் இல்லாத பிரதேசமாகவும் அதன் மூலமாக உள்ளூர் நாய் இனம் அழிவடையாமலும் பாதுகாக்க வேண்டும். எனவே நாய்களின் பாதுகாப்பை, நோய்த் தொற்றைத் தடுப்பதில் கவனவீனம் வேண்டாம். விரைந்து செயற்படுங்கள் என்றார்.

Related posts: