சீனா இலங்கை இடையே ஸ்மார்ட் அட்டை பயணச்சீட்டுக்களுக்கான இயந்திரங்களை பொருத்தும் உடன்படிக்கை !

Saturday, July 25th, 2020

புகையிரத நிலையங்களில் ஸ்மார்ட் அட்டை பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் இலத்திரனியல் இயந்திரங்களை பொருத்தும் உடன்படிக்கை ஒன்று சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

துரிதமாக புகையிரதங்களில் பயணிக்க ஸ்மார்ட் அட்டை பயணச்சீடுக்களையும் புகையிரதங்களில் ஆசனங்களை ஒதுக்கிக்கொள்ள இலத்திரனியல் பயணச்சீட்டுக்கள் வழங்கும் முறைமையையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தது.

இந்த திட்டத்திற்கு அமைய பயணச்சீடுக்களை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களை பொருத்தும் ஒப்பந்தம் சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புகையிரத பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் ஐந்து இலத்திரனியல் இயந்திர கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளதுடன் பிரதான நகரங்களில் இலத்திரனியல் பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களும் பொருத்தப்பட உள்ளன.

பயணிகள் கொள்வனவு செய்யும் இலத்திரனியல் பயணச்சீட்டை ரீலோட் செய்துக்கொள்ள முடியும். என்பதுடன் QR Code மூலமாக மாதாந்தம் பயன்படுத்த முடியும். புகையிரத நிலையங்களில் தேவைக்கு ஏற்ப பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டிலுள்ள 353 புகையிரத நிலையங்களில் இந்த இலத்திரனியல் பயணச்சீட்டுக்களை பெறும் இயந்திரங்களை பொருத்த அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடனை பெற்றுக்கொண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் அனைத்து புகையிரத நிலையங்களிலும் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பொறுப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் புகையிரத நிலையங்களில் ஏற்படும் சன நெரிசலை குறைக்க முடியும் என்பதுடன் பயணிகளுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் என புகையிரத பொது முகாமையாளர் திலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: