ஈ.பி.டி.பியின் முயற்சியால் கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச.சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு!

Monday, March 22nd, 2021

கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கான நிரந்தர சாலை அமைத்தல் மற்றும் கிளிநொச்சி நகருக்கான பேருந்து தரிப்பிடத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அமுனுகமவுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பேச்சுக்களை நடத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இப்பேச்சுக்களின்போது கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்துச்சபைக்கு நிரந்தர சாலை ஒன்றை அமைக்கவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதை அடுத்து உடனடியாக கட்டித்தருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உறுதிளித்துள்ளார்.

போக்குவரத்துச் சாலைக்கென ஒதுக்கப்பட்ட காணிக்கான உரிமம் இன்னமும் போக்குவரத்துச் சபைக்குக் கிடைக்கப்பெறவில்லை தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அமுனுகம, இது விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருடன் பேசி காணி உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு கேட்டுக்கொண்டார்.

காணி உரிமம் கிடைக்கப்பெற்றதும், போக்குவரத்துச் சாலையைக் கடடுவதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதாகவும், இதன்போது, சாலை வாளகத்திலேயே எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பேருந்து திருத்தப் பணிகளுக்கான தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றையும் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குமான சேவைகளை நடத்துவதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் சிறிய மற்றும் பெரிய பேருந்துகளையும் விரைவில் பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் அமுனுகம உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன கோரிக்க...
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று - அரச தலைவர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ...
உலகில் உள்ள 370 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்துக்கு 22 ஆவது இடம் - இந்திய துணைக்கண்டம் மற்றும் த...