எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீட்டு கூட்டத்தை 2 வாரங்களுக்குள் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Friday, November 4th, 2022

இலங்கை கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்ததால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் சட்டமா அதிபர் தலைமையில் 2 வாரங்களுக்குள் கூட்டத்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்ததால் மீனவ மக்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சுற்றுச்சூழல் விஞ்ஞானி  அஜந்த பெரேரா உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த போதே உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு எஸ்.துரைராஜா, மகிந்த சமயவர்தன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கிரிஸ்மால் வர்ணசூரிய ஆஜராகியிருந்தார்.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதியின் சட்டத்தரணி நெரின்புள்ளே ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!
நாட்டில் ஓகஸ்ட் மாதம்முதல் உக்காத பொலித்தீன் வகைகளை பயன்படுத்த முற்றாகத் தடை - சுற்றாடல் அமைச்சர் மஹ...
இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டது!