ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க நடவடிக்கை!
Sunday, April 2nd, 2017
தனியார் மற்றும் அரசசார்ப்பு நிறுவனங்களில் பணியாற்றும் அனர்த்தங்களின் போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவிக்கையில் . அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிதி போதுமானதல்ல.
தொழிலில் ஈடுபட்டுள்ள வேளையில் அனர்த்தங்களினால் ஏற்படும் மரணங்களுக்கு தற்சமயம்; ஐந்து இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இந்த தொகை பத்து இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்படும். அவர்களது குடும்பத்தினருக்காக வழங்கப்படும் தொகை பத்து இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவிருக்கிறது. பத்துப் பேருக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் காப்புறுதியை வழங்க நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
ஆசிரியர் வெற்றிடங்களை பாடசாலை மட்டத்தில் நிரப்ப நடவடிக்கை -பிரதமர்!
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு - இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் அதிகமானோர் க...
மின் சேமிப்புக்காக வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணையுங்கள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொது...
|
|
|


