ஊழல்அதிகரிப்பு: பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!

Friday, November 10th, 2017

பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரும் கடமையாற்றுகின்றனர் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் சேவையிலும் ஊழல் மோசடி செய்வோர், அரசியல்வாதிகளின் அடிவருடிகள் இருக்கின்றார்கள். இதனால் பொலிஸ் சேவையையும் முழுமையான அளவில் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் சில அதிகாரிகள் சாதாரண மக்களைப் போன்று நடந்து கொள்கின்றார்கள்.

எனினும் இவ்வாறு செயற்படும் எந்தவொரு அதிகாரிக்கும் என்னிடமிருந்து மன்னிப்பு கிடையாது.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முதல் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பதவி வகிப்போர் வரையில் அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தொடர்பில் துறைசார் அமைச்சர் மற்றும் செயலாளரிடம் அறிவித்து பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல், மோசடிகளில் ஈடுபடுவோர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகளின் கையாட்களாக செயற்படுவோர் ஆகியோருக்கு பொலிஸ் திணைக்களத்தில் இடமில்லை.

எனினும், எவரேனும் குற்றங்களை திருத்திக் கொண்டு நல்ல முறையில் கடமையாற்றினால் அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related posts: