ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிசார் தெரிவிப்பு!
 Wednesday, September 1st, 2021
        
                    Wednesday, September 1st, 2021
            
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 625 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதன்போது 63 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 62 ஆயிரத்து 710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் பிரவேசிக்கும் 13 இடங்களில் நேற்றையதினம் 858 வாகனங்களும் மற்றும் ஆயிரத்து 470 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்தவும் - மின்சக்தி அமைச்சர்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணி...
ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் - திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        