கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பிரித்தானியா உதவி!
Thursday, April 18th, 2019
கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசுக்கிடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் சுற்றாடலுக்கு பொருத்தமான மின்சார உற்பத்தி வேலைத்திட்டம் பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் முக்கிய மைல் கல்லாகும். மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தக் கூடிய சகல நீர் மூலங்களும் உயர்ந்தபட்ச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் மின்சார விநியோகம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக பிரதி உயர்ஸ்தானிகர் கூறினார்.
Related posts:
இலங்கையின் நிறுவனங்களை கொள்வனவு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி!
தியத்தலாவை விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்கின்றது இராணுவம்!
ஜனாதிபதி தேர்தல் - அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!
|
|
|


