வெளி­நாடுகளில் தொழில்புரி­வோரின் பிள்­ளை­க­ளுக்கு புலமைப்பரிசில் !

Thursday, July 6th, 2017

வெளி­நா­டு­களில் தொழில் புரியும் பெற்­றோ­ரி­னது பிள்­ளை­களின் எதிர்­கால கல்வி மேம்­பாட்­டுக்­காக வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­யகம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது என வெளி­நாட்டு தொழில் வாய்ப்பு தொழில் பயிற்­சிகள் அமைச்­சர்  தலதா அத்துகோ­ரள தெரிவித்துள்ளார்.

ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் கலந்து கொண்டு  கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத்­தெ­ரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

க.பொ.த சாதா­ரண தரம் க.பொ.த. உயர்­தரம் மற்றும் தரம் – 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை சித்­தி­ய­டைந்து இவர்­களின் பெற்றோர் வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­ப­வர்­க­ளாக இருந்தால் இவர்­க­ளுக்கு மாதாந்தம் புல­மைப்­ப­ரிசில் தொகை வழங்­கப்­படும்.

இதற்­கி­ணங்க 2016 ஆம் ஆண்டில் தரம்  5 இல் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 876 மாண­வர்­க­ளுக்கு மாதாந்தம் தலா 15000 ரூபா வீதம் 1 கோடியே 31 இலட்சம் ரூபாவையும் 2015 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த மாண­வர்கள்  1712 பேருக்கு தலா 20000 ஆயிரம் ரூபா வீதம் 3 கோடியே 41 இலட்சம் ரூபாவையும் 2015 ஆம் ஆண்டில்  க.பொ.த. உயர்­த­ரப் ­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 388 மாண­வர்­க­ளுக்கு தலா 3000 ரூபா வீதம் 1 கோடியே 16 இலட்சம் ரூபாவை உதவியாக வழங்குவதற்காக ஒதுக்கியுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.

Related posts: