ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக இதுவரை 59 ஆயிரத்து 35 பேர்கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Monday, May 18th, 2020

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இன்று 18 ஆம் திகதிவரையான காலப் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 59 ஆயிரத்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இக்காலப்பகுதியில் சுமார் 16 ஆயிரத்து 436 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நேற்று 17 ஆம் திகதி காலை 6 மணியில் இருந்து இன்று 18 காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 709 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த காலப்பகுதியில் 946 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மார்ச் 18 முதல் இதுவரையான காலப்பகுதியில் 15 ஆயிரத்து 695 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்து 660 பேருக்கு தண்டணையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது - இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்...
வருகின்றது பெற்றோல் ஏற்றிய கப்பல் - வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கும் நிலையங்களை...
தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே பேச்சுக்களை அரசு முன்னெடுகின்றின்றது - இந்தியாவின் ...