உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !
Tuesday, April 4th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, மார்ச் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இன்று நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனைவருக்கும் அடிப்படை சம்பளம் வழங்கப்படுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கில் பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கலாம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!
பிரதமரின் ஆலோசனைக்கமைய டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் அரங்கங்களை நாடக கலைஞர்களுக்கு சலுகை விலைக்கு ...
இலங்கையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு!
|
|
|


