எமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்று தாருங்கள்: டக்ளஸ் எம்.பி.க்கு வடக்கு இ.போ.ச ஊழியர்கள் மகஜர்!

Wednesday, September 18th, 2019

இலங்கை போக்குவரத்து சபை ஊழிகர்கள் மேற்கொண்டுவரும் நியாயமாக போராட்டத்திற்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவகளுக்கு வடமாகாண போக்குவரத்து ஊழியர் சங்கம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட ரூபா 2500.00 சம்பள உயர்வு இ.போ.ச ஊழியர்களுக்கு 2019 ஜூலை மாதத்திலிருந்து தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்  உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாத இன்றையதினம் கட்சியின் யாழ் மாநகரசபை ஒருங்கிணைப்பாளர் நந்தன் போரட்ட இடத்திற்கு சென்று ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் நிலைமைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தினார்.

இதன்போதே குறித்த சபையின் ஊழியர்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகஜர் ஒன்றை கையளித்தனர்.

குறித்த  சங்கத்தினர் தமது மகஜரில் –

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட ரூபா 2500.00 சம்பள உயர்வு இ.போ.ச ஊழியர்களுக்கு 2019 ஜூலை மாதத்திலிருந்து தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

2006/30,2016/02 இலக்க சம்பள சுற்று நிருபத்தின் படி 2018.10.01 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து அமுல்படுத்தும் சம்பளம் இ.போ.ச ஊழியர் அலுவலக சபையின் ஊழியர்களுக்கு 2019 செப்டெம்பர் மாதத்திலிருந்து அடிப்படைச்சம்பளத்தில் உடனடியாக சேர்க்கப்பட வேண்டும்.

2018 ஒக்டோபர் மாதத்திலிருந்து புதிய சம்பளத்தை அதிகரிப்பதற்கு சமமாக இதுவரை வழங்கப்படாதிருந்த 10 மாத கால நிலுவைச் சம்பளம் அலுவலக சபை ஊழியர்களுக்கு உடன் வளங்குதல் வேண்டும்.

சாரதி, காப்பாளர், தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்களுக்கு 2019 ஜனவரி மாதத்திலிருந்து அதிகரிக்கப்பட்ட ரூபா 2000.00 சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கும்  வருடாந்த சம்பள உயர்வு எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சகல ஊளியர்களுக்கும் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தியிருந்தனர்.

குறித்த ஊழியர்களை சந்தித்’து கருத்து தெரிவித்த நந்தன் – போராட்டங்களை முன்னெடுப்பது ஊழியர்களது ஜனநாயக உரிமை. ஆனாலும் அது பொதுமக்களை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றாகும். தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் பயணிகள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் ஊழியர்களது நியாயமான போராட்டத்திற்கு நாம் எமது ஆதரவுகளை வழங்குகின்றோம். உங்களது பிரச்சினைகளை எமது கட்சியின் செயலாளர் நாயகம் ஊடாக துறைசார் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்கின்றோம் என்றார்.

Related posts: