வறட்சியின் தாக்கமும்  யாழ் மாவட்டம் முகம்கொடுக்கும் சவால்களும்:    ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்ஆ ராய்வு!

Thursday, January 19th, 2017

வறட்சியை யாழ் குடாநாடு எதிர்கொள்வதற்கான சவால்களை மையப்படுத்தி  ‘வறட்சியின் தாக்கமும் எதிர்நோக்கும் சவால்களும்’ என்ற தொனிப்பொருளில் இன்று யாழ் மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இணைத்தலைமையில் இடம்பெற்றது.

2016ம் ஆண்டு போதிய மழைவீழ்ச்சி இன்மையால் ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் ஜனாதிபதியில் வறுமை தணிப்பு ஆண்டு திட்டங்களை முதன்மைப்படுத்தி இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மழை நீரை போதிய அளவில் சேமிக்காத காரணத்தினால் தான் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும் நிலத்தடி நிரை முழுவதுமாக நம்பியுள்ள யாழ் மாவட்டத்தில் காணப்படும் நீர்நிலைகள் சிறுகுளங்கள் தடுப்பணைகளை புனரமைப்பதற்கென விசேட திட்டம் ஒன்று அத்தியாவசியமானது என்று யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி சுட்டிக்காட்டினார்.

16176900_1297473840291700_1996440112_n
தற்போதைய வறட்சியினை எதிர்கொள்ளும் விதமாக நீர்விநியோகத்தை வறட்சி ஏற்படும் பிரதேசங்களில் மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதற்கென மாவட்டத்தில் காணப்படும் நீர் மூலங்களான பாரிய கிணறுகள் அடையாளப்படுத்தப்பட்டு தயார்படுத்தப்படுவதற்கான முயற்சிகளும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

16144100_1297473790291705_376652724_n
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படவேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பில் இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விசேடமாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

16128290_1297473590291725_1518065730_n

16176895_1297473560291728_145612508_n

Related posts:

உக்ரைன் மீதான போர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை அதிகரிப...
உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேல...
பச்சை குத்தியவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது - தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் தெ...