உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சவாலான தேர்தல் அல்ல – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சவாலான தேர்தல் அல்ல என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை கொழும்பில் நேற்று திங்கட்கிழமை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எந்த சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்டாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே
மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை கொழும்பில் நேற்று செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு சேறுபூசல்கள், குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டுக்ககாக இணைந்து பணியாற்ற முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரசாரங்கள் உட்பட தேர்தல் பணிகளில் பசில் ராஜபக்ச செயற்பாட்டு ரீதியாக ஈடுபடுவார் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறப்பான வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
|
|