பல்கலை தாக்குதலுக்கு கண்டனம்!

Sunday, July 17th, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.  அனைத்து மாணவர்களுக்கும் சுதந்திரமாக கல்வி கற்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என, அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.
அப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வவுனியா கிளையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.  இதனையடுத்து அப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், அப் பகுதியின் பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts:

தவறான செயற்பாடுகள் காரணமாக 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன - பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங...
வீதி விபத்தில் பிரபல சட்டத்தரணி றெமீடியஸ் படுகாயம் – யாழ் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவி...
கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கான வசதிகளை விரிவுபடுத்தியது குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

புதிய உலகுக்கு ஏற்ப விரைவில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தில் மாற்றம் - வர்த்தக அமைச்ச...
மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் - அதிபர் பணி இடைநீக்கம் - மேல் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் தெரிவி...
இலங்கையுடன் தொடர்புபட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் - மெரிக்கா...