உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்களை இலங்கை இன்னும் நிறைவுசெய்யவில்லை- பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, June 19th, 2023

இலங்கை தமது உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் திட்டங்களை இன்னும் நிறைவு செய்யவில்லை என்று பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வங்கி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக சேமசிங்க ட்வீட் செய்துள்ளார்.

ஒரு முடிவு இல்லாமல் முன்கூட்டியே கூறப்படும் ஊகங்கள் சந்தை நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் ஒரு பகுதியாக சர்வதேச கடன் வழங்குநர்களுடனான கடனையும் அதன் உள்ளூர் கடனையும் இலங்கை மறுசீரமைக்க வேண்டியுள்ளது.

இந்தநிலையில் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஈடுபடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது சாதகமான உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் என்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் பதில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜ...
புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் - நுகர்வோர் இராஜாங்க அமைச்ச...
மானிப்பாயில் வீடுடைத்து கொள்ளை - மானிப்பாயில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் 23 ஆம் திகதி வரை நீடிப்பு !
வெளியானது அதிவிசேட வர்த்தமானி - பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது – ...
எதிர்வரும் ஆண்டில் அரசாங்க சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது - திரைசேரியின் செயலா...