தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

Tuesday, January 26th, 2021

தென்னை மரங்களை வெட்டுவதற்குரிய அனுமதியை பிரதேச செயலாளரிடம் பெற்றுக் கொள்வதை அத்தியாவசியமாக்கி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது

இது தொடர்பான சட்டமூலம், சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் வீடொன்றை நிர்மாணிக்கும்போது அங்கு காணப்படும் தென்னை மரங்களை வெட்டுவதற்குரிய அனுமதி வழங்கப்படவுள்ளது.

எனினும், தேவையற்ற விதத்தில் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்கான அனுமதி வழங்கப்படாது என தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான சட்டமூலம், நாடாளுமன்ற அனுமதிக்காக விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோர...
மருத்துவபீட மாணவன் மரணம் - முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரு...
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்ப...