வெளியானது அதிவிசேட வர்த்தமானி – பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது – மஹிந்த தேசப்பிரிய !

Saturday, July 18th, 2020

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அவர்களால் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய சுகாதார வழிகாட்டுதல் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படாவிட்டால் ஆகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என எச்சரித்திருந்த நிலையிலேயே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா அச்சம் இல்லாவிட்டாலும் பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது என தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: