உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தீர்மானம்!

Tuesday, April 14th, 2020

சேவையாளர்களுக்கு மற்றும் வைப்பாளர்களுக்கு வரியை ஒரே நேரத்தில் செலுத்துவது அசௌகரியம் என கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய குறித்த தொகையை இலகுவான முறைமையின் கீழ் மேற்கொள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் இதன்போது புதிய வரி அறிமுகப்படுத்தப்படவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் லதுன் குருகே தெரிவித்துள்ளார்.

மேலும் சேவையாளர்கள் வரியை ஒரே நேரத்தில் செலுத்துவதில் அசௌகரியம் காணப்படுவதனால் தவணை முறையில் செலுத்துவதற்கான முறை ஒன்றை உருவாக்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து நாம் இது தொடர்பான நிறுவனங்களின் சேவையாளர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இதனை ஒரே நேரத்தில் செலுத்துவதில் அசௌகரியம் காணப்படுவதனால் மாதாந்த ஊதியத்திலிருந்து செலுத்துமாறு ஆலோசனை வழங்கினோம்.

எவ்வாறாயினும் இதன்போது புதிய வரி அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் லதுன் குருகே தெரிவித்துள்ளார்.

Related posts:

கால்நடைகளின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகுந்த நீர்வு எட்டப்படும் - வேலணை பிரதேச சபை தவிசாளர் கருண...
சுயநலமின்றி மக்களுக்கு பணிபுரிய விரும்பும் வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் - யாழ் மறைமாவட்ட ஆயர் வேண...
பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்: அமைச்சர் மக...