இலங்கையின் சட்டம் – யாப்புக்கு அப்பால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது – வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு!

Tuesday, September 6th, 2022

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் சோதனைக்காக உண்மையை கண்டறிவதற்காக உள்ளக பொறிமுறை ஒன்று எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை சார்பில் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சர்கள் தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் பேச்சுவார்த்தை மூலம் இணக்கபாட்டை ஏற்படுத்தி கொள்ள எதிர்பார்ப்பதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளக பொறிமுறை ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இறுதி நிலைப்பாட்டை எட்டவுள்ளோம்.

இந்த விடயத்தில் இராணுவத்தின் மீது அநீதியான வகையில் பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

அதேநேரம் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்கு தீர்விளை பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சட்டம் மற்றும் யாப்பு என்பவற்றுக்கு உட்பட்டு இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கையின் சட்டம் மற்றும் யாப்புக்கு அப்பால் சென்று எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: