உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது விசேட வர்த்தமானி !

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 44 ஆவது உறுப்புரையின் பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளை சட்டத்தின் 55ஆம் பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேறுபாடுகளைக் களையும் தருணமாக தீபாவளியை கொண்டாடுவோம் - பிரதமர் வாழ்த்து!
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களின் கடமைகள் இன்று ஆரம்பம்!
இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|