உலக வங்கியின் நிதியில் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை மறுத்து லிட்ரோ நிறுவனம் விளக்கம்!

Tuesday, September 13th, 2022

சமையல் எரிவாயு இறக்குமதி  தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம், சமையல் எரிவாயு கொள்வனவின் போது முழுமையாக வெளிப்படை தன்மையை பின்பற்றுகின்றது. அது மாத்திரமன்றி உலக வங்கியின் கண்காணிப்பின் கீழ் அனைத்து கொள்வனவு மற்றும் பணக்கொடுப்பனவுகளும் இடம்பெறுகின்றன.

மேலும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும்போது அனைத்து நடவடிக்கைகளும் அரச திறைசேரியின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் நிதி மோசடியானது எவ்வாறு இடம்பெறும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் கேள்வி  எழுப்பியுள்ளதோடு, அவ்வாறான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 புதுவருட விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும் எ...
தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி தெ...
அர்த்தம் மாறுப்படும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமானது - சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட...