தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Tuesday, August 31st, 2021
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 6ஆம் திகதியுடன் நீக்குவதா? நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனே முடிவு எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரப் பிரிவினருடன் இது தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடப்படும் எனவும், அதன்பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படுகின்ற பேரீச்சம் பழங்களுக்குரிய வரியை முற்றாக அகற...
கா.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு!
எமது கட்சியையும், தலைமையையும் பலப்படுத்த அனைத்துத் தோழர்களும் முன்வர வேண்டும் - தோழர் மாட்டின் ஜெயா ...
|
|
|


