உயிரிழப்புக்கள் மேலும் 50 ஆயிரத்தை தாண்டும் – கவலை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு!

Friday, April 3rd, 2020

2019 வருட இறுதியில் சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளிலும் பரவ ஆரம்பித்து இன்று வரையில் பாதிப்படைந்தோரின் என்ணிக்கை 1 மில்லியன் ஆகவும் உயிரிழந்தோரின் என்ணிக்கை 50 ஆயிரத்தையும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது.

வைரஸைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது.

ஆனாலும் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருவது குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Related posts: