வறட்சியான வானிலை : நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!
Thursday, April 15th, 2021
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது இலங்கைத்தீவில் மிகவும் வறட்சியான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நீர் நிலைகளில் உள்ள நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நீர் வழங்கல் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து 1939 என்ற எண்ணை அழைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனுஷ்கவுக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்தியது சிட்னி நீதிமன்றம்!
35 வயதினை பூர்த்தி செய்யாத 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவையில் இணைப்பு - கல்வி அமை...
தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் - யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர்...
|
|
|


