உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்காகன இறுதி திகதி அறிவிப்பு!
Saturday, January 7th, 2017
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கு ஜனவரி 23ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான மீள் திருத்தும் விண்ணப்ப பத்திரம், பெறுபேறுகளுடன் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கு எதிர்வரும் நாட்களில் தேசிய பத்திரிகைகள் ஊடாக வெளியிடப்படும் விளம்பரத்தின் படி விண்ணப்ப பத்திரத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
அழுத்தம் கொடுக்கும் பரப்புரை வேண்டாம் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !
கொப்பி, உள்ளிட்ட கற்றல் உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிப்பு – வறிய மாணவர்கள் பெரும் அவதி –...
டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படின் வழக்கு - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


