கரையோர பாதுகாப்புத் தரப்பினருக்கிடையில தகவல்களைப் பரிமாற விசேட தொலைபேசி இலக்கம்!

Tuesday, January 3rd, 2017

இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லையை மீறும் படகுகளைத் தடுக்கும் நோக்கில் இரு நாட்டு கரையோர பாதுகாப்புத் தரப்பினருக்கிடையில தகவல்களைப் பரிமாற வசதியாக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான இலங்கைக் குழவினருக்கும் இந்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினருக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (02) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மஹிந்த அமரவீர விசேட தொலை பேசி மூலமான தகவல் பரிமாறலுக்கான இணக்கப்பாடு குறித்து தெரிவித்தார்.

முப்பது வருடங்களுக்கு மேலாக தொடரும் அத்துமீறிய மீன்பிடிப் பிரச்சினையை இந்தியாவுடன் படிப்படியாகவே தீர்த்துக் கொள்ள முடியும். இதன் அடிப்படையில் இரு நாட்டுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுவருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதன் போது மேலும் கூறினார்.

b3afed0139a407b8c5a02bd135be0fab_XL

Related posts: