டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படின் வழக்கு – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, May 15th, 2023

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பிரவேசிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், அது தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 3,142 டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேல்மாகாண போக்குவரத்து பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது, 3,344 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

முப்படையினர், காவல்துறையினர், சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளூராட்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஏனைய பொதுமக்கள் உட்பட 7,351 பேர் இந்த விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: