தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை கரவெட்டியில்!

Tuesday, December 19th, 2017

கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறு கிராம அலுவலர் பிரிவுகளுக்கான தேசிய அடையாள அட்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடமாடும் சேவை செவ்வாய்க்கிழமை காலை  9 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் நடைபெறும்.

இந் நடமாடும் சேவையில் கரவெட்டி வடக்கு ஜே.364, கரவெட்டி தெற்கு ஜே.365, மத்தொனி ஜே.366, கரவெட்டி மத்தி ஜே.367, கரவெட்டி கிழக்கு ஜே.368, கட்டைவேலி ஜே.369, ஆகிய ஆறு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மக்கள் கலந்து கொள்ளலாம்.

இப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 16 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாதவர்கள், தேசிய அடையாள அட்டையை தொலைத்தவர்கள், தேசிய அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியவர்கள் சேதமடைந்த, எழுத்துகள் தெளிவற்ற அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் இச் சேவையில் பங்குபற்றி பயன்பெறலாம்.

சேவையின்போது  புகைப்படம் எடுத்தல், பொலிஸ் அறிக்கை பெறல், சமாதான நீதிவான் சேவை, தபால் முத்திரை சேவை, போட்டோ பிரதி சேவை என்பவற்றை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேவைப்படும் ஆவணங்களான பிறப்பு சான்றிதழ், உத்தேச வயது சான்றிதழ், திருமண சான்றிதழ் (திருமணமான பெண்கள்), இறப்பு சான்றிதழ்(கணவரை இழந்தவர்கள்), குடும்ப அட்டை இவற்றை கட்டாயம் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: