40 ஏக்கர் சோளச் செய்கை கிளிநொச்சியில் அழிப்பு!

Sunday, February 10th, 2019

கிளிநொச்சி மாவட்டத்தில் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர் வரையான சோளச் செய்கை அழிவடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அம்பாறை மாவட்டத்தில் இப்புழு அடையாளம் காணப்பட்டாலும் தற்போது வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இதன் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அதிகளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 240 ஏக்கர் சோளச்செய்கை கடந்த பெரும்போகத்தின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர் சோளச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருவையாறு, செல்வாநகர் போன்ற பகுதிகளில் வீட்டுத் தோட்டச் செய்கைகளிலும் இந்தப் படைப்புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகள், பயிர் சிகிச்சை முகாம்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts: