உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதன் எதிரொலி – சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த வருடம் மே வரை பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப் பரீட்சைகள் மே மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் வழமை போன்று திட்டமிடப்பட்ட திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் - தனிமைப்படுத்தப்பட்டனர் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயக...
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தவறுகளுக்கான தண்ட பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தும் முறை அறி...
எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு - லிட்ரோ நிறுவன தலைவர் தெ...
|
|