உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Thursday, March 31st, 2022
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 2021 உயர்தரப் பரீட்சைக்காக அதிபர்கள், கண்காணிப் பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திட்டமிட்டபடி பரீட்சை நடத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில் இந்த வருடம் மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் திட்டமிடப்பட்ட வகையில் பிரதான பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான கடதாசிகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மே மாதம் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை அட்டாளைச்சேனை, தர்காடவுண் ஆகிய கல்வியற் கல்லூரிகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
|
|
|


