ஹைபிரிட் வாகன பற்றரிகளினால் சூழலுக்கு அச்சுறுத்தல்!

Thursday, October 26th, 2017

இலங்கையில் பாவனையிலுள்ள ஹைபிரிட் வாகனங்களின் பற்றரிகள் எதிர்காலத்தில் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஹைபிரிட் ரக வாகனங்கள் சுமார் 4500 வரை பயன்பாட்டில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றின் பற்றரிகளின் ஆயுட்காலம் எட்டு முதல் பத்து ஆண்டுகளாகும். இலங்கைக்கு கடந்த 2010ஆம் ஆண்டிலேயே ஹைபிரிட் ரக கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவ்வகையில் அவற்றின் பற்றரிகளின் ஆயுட்காலம் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் நிறைவடையவுள்ளன.

இந்நிலையில் குறித்த பற்றரிகளை மீள்சுழற்சி அல்லது பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக இதுவரை எதுவித கவனமும் செலுத்தப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அனைத்து வாகனங்களும் பெரும்பாலும் ஹைபிரிட் ரக வாகனங்களாகவே இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்வதில் பெரும் சிரமம் ஏதுமில்லை.

இவ்வகை கார்களின் பற்றரிகள் அதிகூடிய விசத்தன்மையான இரசாயனங்களைக் கொண்டிருப்பதால் அவற்றினை மீள்சுழற்சி அல்லது அழிக்கும் போது பாதுகாப்பான நடைமுறைகளைக் பின்பற்ற வேண்டியுள்ளது.  இல்லாவிடின் சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதனடிப்படையில் ஹைபிரிட் ரக கார்களின் பற்றரிகளினால் இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் நாடு பாரிய சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று வாகன தொழில்நுட்பவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: