இலங்கை வருகிறார் ஜப்பானிய சிறப்பு தூதுவர்!

Wednesday, June 12th, 2019

முக்கிய விவகாரங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சிறப்பு தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பவுள்ளார்.

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கலாநிதி ஹிரோரோ இசுமியே, சிறப்பு தூதுவராக இலங்கை வரவுள்ளார்.

அவர், எதிர்வரும் 20ஆம் திகதிக்கும் 22ஆம் திகதிக்கும் இடையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது, இலங்கை தொடர்பாக ஜப்பானிய அரசாங்கம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையை மீளாய்வு செய்வது குறித்து, பிரதமர் கலந்துரையாடுவார் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஜப்பானிய சிறப்பு தூதுவர் பேச்சு நடத்தவுள்ளார்.

Related posts:

சபை நிதியில் உள்ளூராட்சி மன்றங்கள் நிவாரணம் வழங்க முடியாது – வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடந்த கூட...
இயல்பு நிலை திரும்பினாலும் யாழ்ப்பாணத்தில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை - ...
தாதியர் சேவைக்கு கலைப்பிரிவையும் உள்ளீர்ப்பதற்கு தாதியர் சங்கம் கடும் எதிர்ப்பு – இது நோயாளிகளுக்கு ...