உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024

உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இவ்வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அமைச்சர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது டயபரா மற்றும் புஹூல்பொல நீர்த்தேக்கங்களுக்கு சென்ற அமைச்சர் அதன் பணிகளையும் பார்வையிட்டார்.

இதனையடுத்து எல்ல கரதகொல்ல பிரதேசத்திலுள்ள உமா ஓய நீர் மின் உற்பத்தி ஆலைக்கும் அமைச்சர் சென்றார். 120 மெகாவோட் மின்சாரம் இதனூடாக உற்பத்தி செய்யப்படும். இதேவேளை மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு சிறு மற்றும் பெரும்போகங்களில் நீரை விநியோகிக்கவும் உமா ஓய வேலைத்திட்டத்தின் ஊடாக வசதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: