யாழ். மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான முன்னேற்பாடு  தொடர்பான கலந்துரையாடல்!

Sunday, September 18th, 2016

வீடமைப்பு நிர்மாணத்துறை அபிவிருத்தி அமைச்சினால் யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான முன்னேற்பாடு தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் (16) யாழ் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வீடமைப்பு நிர்மாணத்துறை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் இந்திக்க பண்டரா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, வலிகாமம்,தென்மராட்சி, தீவகம் ஆகிய பகுதிப்  பிரதேச செயலகங்களை உள்ளடக்கியவாறு சுற்றுலா மையங்கள், மீன்பிடி இறங்கு துறைமுகங்கள், கால்வாய்ப் புனர் நிர்மாணம், வீடமைப்புக்கான புனர்நிர்மாணப் பணிகள், மற்றும் யாழ். நகரை  அழகுபடுத்தும் செயற்றிட்டம் போன்ற பல்வேறு செயற்பாடுகள் தொடர்பாகத் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் தீவீர கவனமும் செலுத்தப்பட்டன.  250 மில்லியன் ரூபா செலவில் இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

unnamed

unnamed (1)

Related posts: