ஈ.பி.டி.பியின் முயற்சியால் நயினாதீவில் கடல் நீரை நன்நீராக்கும் குடிநீர் திட்டம் ஆரம்பம்!

Wednesday, September 26th, 2018

குடிநீருக்கான நெருக்கடியை அதிகம் எதிர்கொண்டுவரும் நயினாதீவு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட பெரு முயற்சி காரணமாக கடல் நீரை நன்நீராக்கும் திட்டம் அடுத்த மாதம் முற்பகுதியில் நயினாதீவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு வருடமும் தீவகப் பகுதி மக்கள் குடிநீருக்கான பிரச்சினைக்கு அதிகமாக முகங்கொடுத்து வருகின்றனர். இதன் தாக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தற்போது நாம் அரசில் அங்கம் வகிக்காத போதிலும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களின் நலன்களில் கொண்டுள்ள அக்கறை காரணமாக மத்திய அரசுடன் கொண்டுள்ள நல்லுறவு மூலமாக நீர்ப்பாசன அமைச்சுடன் குறித்த விடயம் தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த குறித்த அமைச்சு 15 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்பிரகாரம் நயினாதீவு மக்களின் குடிநீருக்கான பிரச்சினைக்கு தீர்வு கண்டுகொள்ள முடியும் என்றும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே கடந்த ஆட்சிக் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட பெருமுயற்சி காரணமாக நெடுந்தீவில் இவ்வாறான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அது வெற்றிகரமாக மக்களுக்கு பயன்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்டகது.

Related posts: