சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கடினம் – தேர்தல் ஆணைக்குழு !

Tuesday, May 5th, 2020

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுத் தேர்தல் நடத்துவது குறித்த சுகாதார வழிமுறைகள் உள்ளடங்கிய அறிக்கை நேற்றையதினம் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் ஒன்றின் போது இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் சிரமமானது என தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சுகாதார தரப்பிற்கு அறிவித்துள்ளனர்.

சமூக இடைவெளியை பேணி தேர்தல் நடாத்துவது குறித்து இந்த அறிக்கையில் ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார வழிமுறைகள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்து இறுதித் தீர்மானத்தை அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர்களான டொக்டர் லக்ஸ்மன் கம்லத், டொக்டர் பபா பலிஹவடன, டொக்டர் திலக் சிறிவர்தன, டொக்டர் இனோகா சுரவீர ஆகியோரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமைய இந்த அறிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts: