ஈ.பி.டி.பியின் முயற்சியால் புதுப்பொலிவுபெற்றன வசந்தபும் வீதிகள்!

Thursday, August 12th, 2021

யாழ் மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களது முயற்சியால் சீர்செய்யப்பட்டு வருகின்றது.

யாழ் மாநகர சபையின் 18 ஆம் வட்டாரத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு மிக அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த வசந்தபுரம் பகுதியில் 3 வீதிகளும்  கெலன் தோட்ட வீதி மற்றும் சுவாமியார் வீதி ஆகியன ஈழ மக்கள்  ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியுமான றெமிடியஸின் மாநகர சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் பிரதி முதல்வர் ஈசனது சொந்த வட்டாரமான குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் அவர் கண்டுகொள்ளாத நிலையில் இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியசின் கவனத்திற்கு குறித்த பிரதேச மக்கள் கொண்டுசென்றிருந்தனர்.

இந்நிலையில் அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்தக்கு கொண்டு சென்றிருந்த றெமிடியஸ் அதன் அபிவிருத்தி பணி தொடர்பிலும் அப்பிரதேச மக்களின் நலன்கள் தொடர்பிலும் தெரியப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து குறித்த வீதிகளை மக்களின் நலன்கருதி மாநகரசபை உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடுவதற்கான முயற்சிகளை மேற்கொளவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுக்கு ஆலோசனைனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பிர் றெமீடியஸ் தனக்கான நிதி ஒதுக்கிட்டின் மூலம் குறித்த வீதிகளை புனரமைத்து மக்களின் அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுக் கொடுத்திருந்தார்.

குறித்த வீதிகள் புனரமைக்கப்பட்டமையை அடுத்து அப்பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: