அரசியலமைப்பு சபையின் கன்னி அர்வு இன்று!

Tuesday, April 5th, 2016

இலங்கையில் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் முறையாக அரசியலமைப்பு சபையாக கூடுகிறது இதன் போது அரசியலமைப்பு சபைக்காக 7 உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதோடு நடவடிக்கை குழுவுக்கு 21 உறுப்பினர்கள் தெரிவாக இருப்பதாக பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் திருமதி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகிறது. வாய்மூல விடைக்கான கேள்வி பதிலை தொடர்ந்து பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.

பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூட இருப்பதோடு புதிய அரசியலமைப்பு சபையாக பாராளுமன்றம் கூடி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக சபாநாயகர் இதன் போது விளக்கமளிப்பார்.

அதனை தொடர்ந்து பிரதமரும் கட்சித் தலைவர்களும் உரையாற்ற இருப்பதாக அறிய வருகிறது.

அரசியலமைப்பு சபைக்கு சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 7 உப தலைவர்கள் தெரிவாக உள்ள அதே வேளை, நடவடிக்கைக் குழுவுக்கும் 21 பேர் தெரிவு செய்யப்படுவர். இதற்கு சபாநாயகர், பிரதமர் ,எதிர்க்கட்சித் தலைவர், நீதி அமைச்சர் ஆகியோர் பதவி வழியாக தெரிவாக உள்ளனர். மே மாதம் முதல் அரசியலமைப்பு சபை தொடர்ச்சியாக கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: