அச்சுறுத்தல் ஏதும் கிடையாது – யாழ். படைகளின் கட்டளை தளபதி!

Wednesday, July 5th, 2017

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் கிடையாது என்று இலங்கை இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த வலி.வடக்குப் பகுதியினுள் உள்ளடக்கப்பட்டிருந்த மயிலிட்டி இறக்குதுறை மற்றும் 54 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை:

‘பாதுகாப்பு நிலைமைகள், அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் என்பன கவனத்தில் எடுத்து காணிகளை இராணுவம் விடுவித்து வருகிறது. காணிகளை விடுவிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதியில் ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா, விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு சாத்தியம் உள்ளதா என பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்வோம்.

அது 100 வீதம் திருப்தியாக உள்ளது. விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பான எந்த அச்சுறுத்தலும் கிடையாது. களவு கொள்ளை போன்ற சில குற்றங்கள் இடம்பெறுகின்றன. அது காவல்துறையின் கீழ் வருகின்ற விடயங்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக ஏதேனும் ஒரு பிரதேசம் இனம்காணப்பட்டால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வாய...
அதிபர் – ஆசிரியர்களை சேவைக்கு அழைக்கும் முடிவில் மாற்றம் - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
போதைப் பொருள் பாவனை போன்று தொலைபேசிப் பாவனையினூடான ஆபத்தும் சிறுவர்களிடையே அதிகரித்துள்ளது - யாழ்ப்...