கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றிதழ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

Monday, November 22nd, 2021

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகார பிரிவின் இலத்திரனியல் ஆவணச் சான்றிதழ் சேவைகள் இன்று திங்கட்கிழமைமுதல் 150 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில்  (e-DAS) ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த வாரம் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதனால், சேவைகளை வழங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் கிளை சான்றளிப்பு முறைமையும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சு தற்போது நிலைமையை சீர் செய்வதில் ஈடுபட்டுள்ளதுடன், அதுவரை சான்றளிப்பு சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 011- 2338812 அல்லது dgcons@mfa.gov.lk  மூலம் கொன்சியூலர் விவகாரப் பிரிவை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா அச்சுறுத்தல் : இலங்கையில் இதுவரை 50 பேர் பூரண சுகம் - 133 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் -...
சீன தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் பவித்ராவின் பத்திரத்திற்கு அமைச்சரவ...
தவணைக் கொடுப்பனவில் கடன் செலுத்துபவர்களுக்கு கடும் நெருக்கடி - வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு நடவடி...