ஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்கள் – நீர்ப்பாசனத் திணைக்களம்!

Tuesday, April 9th, 2019

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடைக்கிடையே ஏற்படும் வறட்சி காரணமாக ஈரவலயங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்நிலைகள் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார்.

ஈர வலயங்களில் அதிகளவு உணவு உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள பணிப்பாளர், வறட்சி காரணமாக உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, மகாவலி மற்றும் களனி ஆற்றை அண்மித்த பகுதிகளில் புதிய நீர்த்தேக்கங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்நிலைகள் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

விவசாய உற்பத்தி கருதியதாக துறைசார்ந்தோருக்கு பல்வகை நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சரவைப் பேச்சா...
சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது - இராஜாங்க அம...
இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது – இந்த கடினமான சவாலையும் வெற்றிகொள்ளும் - ...