நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Wednesday, May 31st, 2023
உலக சந்தையில் சிமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து ஒரு மாதத்தில் கூடி உரிய விலை குறைப்பு சதவீதத்தை சரியாக அறிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலமான கடவுச்சீட்டு :முன்னிலையில் ஜேர்மன் - இலங்கைக்கு பின்னடைவு!
அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களே நாட்டுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படக் காரணம...
பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம் - CID பணிப்பாளராக மகளிர் SSP முத்துமால நியமனம்!
|
|
|


